கத்தார் பல்கலைக்கழகம் பிரெஞ்சு கலாச்சார வார நிகழ்வை ஒத்திவைத்தது.!

postpones French Cultural Week
Pic: QU

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கத்தார் பல்கலைக்கழக நிர்வாகம் பிரெஞ்சு கலாச்சார வார நிகழ்வை (French Cultural Week) காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 4 பேர் கைது‌.!

இஸ்லாமிய நம்பிக்கை, புனிதமான விஷயங்கள் மற்றும் சின்னங்களோடு விளையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கத்தார் பல்கலைக்கழகம் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கத்தாரில் உள்ள Family Food centre, Family Mart, New Indian Supermarket, Retailmart Hypermarket, Qatar Shopping Complex போன்ற சூப்பர் மார்கட்டுகள் பிரான்ஸ் உற்பத்திப் பொருட்களை சந்தையிலிருந்து நீக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பிரான்ஸ் பொருட்கள் அகற்றம் – காரணம் என்ன.?

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…