கத்தாரில் இந்த மாதத்தில் வானிலை எப்படி இருக்கும்.? QMD தகவல்.!

Pre Winter Month Begins
Pic: Twitter/Qatar Weathet

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) நவம்பர் மாதத்தை இலையுதிர்காலத்தின் மூன்றாவது மற்றும் கடைசி மாதமாக குறிப்பிட்டுள்ளது.

இது குளிர்காலத்திற்கு முந்தைய மாதமாகக் கருதப்படுகிறது, இந்த மாத்ததில் வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்திற்குப் பிறகு, நவம்பர் மாதத்தில் இரண்டாவது அதிக இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி நிலநடுக்கம்: கத்தார் நாட்டிற்கு நன்றி தெரிவித்த துருக்கி தூதர்.!!

மேலும், தற்போது நிலவும் காற்று முக்கியமாக வடமேற்கு திசையில் இருப்பதாக கத்தார் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்திற்கான மிகக் குறைந்த மற்றும் அதிக வெப்பநிலை முறையே 11.8 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.

மேலும், நவம்பர் மாதத்தில் தினசரி சராசரி வெப்பநிலை 24.7 டிகிரி செல்சியஸ் ஆகும். கடந்த மாத சராசரி வெப்பநிலை உடன் ஒப்பிடுகையில் இது கணிசமாகக் குறைவாகும்.

கத்தாரில் உள்ள இந்த சந்திப்பு 5 மாதங்களுக்கு மூடல் – MOI அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…