கத்தாரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி துவக்கம்.!

Qatar begins Covid-19 vaccine
Pic: Ahal Qatar

கத்தாரில் COVID-19 தடுப்பூசி போடும் பணி  இன்று (23-12-2020) புதன்கிழமை காலை முதல் ஏழு சுகாதார மையங்களில் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்பட்டவர்களான 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட பராமரிப்பில் உள்ள பெரியவர்கள், கடுமையான நாள்பட்ட நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தொலைபேசி அல்லது SMS மூலம் தொடர்பு கொள்ளப்படுகிறது.

கத்தாரில் இன்று (டிச.23) புதிதாக 140 பேருக்கு தொற்று உறுதி.!

Pfizer மற்றும் BioNTech வழங்கிய தடுப்பூசி அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களை நிறைவேற்றியுள்ளது என்றும், தடுப்பூசி முதல் கட்டமாக டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கிடைக்கும் ஏழு ஆரம்ப சுகாதார மையங்கள்:

  1. Al Wajba சுகாதார மையம்
  2. Leabaib சுகாதார மையம்
  3. Al Ruwais சுகாதார மையம்
  4. Umm Slal சுகாதார மையம்
  5. Rawdat Al Khail சுகாதார மையம்
  6. Al Thumama சுகாதார மையம்
  7. Muaither சுகாதார மையம்

கத்தார் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் பிப்ரவரி 15, 2021 வரை நீட்டிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…