நைஜீரியா: 110 அப்பாவி மக்கள் கொடூர கொலை – கத்தார் கடும் கண்டனம்.!

Qatar condemns attack Nigeria
Pic: Twitter/@DAWISU

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இந்த கொடூர தாக்குதலுக்கு கத்தார் கடும் கண்டனத்தைப் தெரிவித்துள்ளது.

வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிராகரிப்பதில் கத்தாரில் உறுதியான நிலைப்பாட்டை கத்தார் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கத்தாரில் இன்று முதல் தொடங்கும் குளிர்காலம்.!

இந்த கோர தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், நைஜீரியாவின் அரசாங்கத்திற்கும் மற்றும் மக்களுக்கும் கத்தார் இரங்கலைத் தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய விரும்புவதாகவும் அமைச்சகம் நேற்று முன்தினம் (29-11-2020) வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கத்தார் பெட்ரோலியம் டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…