கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!

Qatar Customs thwarts smuggling of prohibited tobacco
Pic: Screenshot from Qatar Customs video

கத்தார் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை கடத்தும் முயற்சியை Air Cargo மற்றும் தனியார் விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் ட்வீட்டர் பதிவு ஒன்றில், முடி பராமரிப்பு பொருட்களில் மறைத்து வைத்து கடத்த முயன்ற 1500 கிலோ புகையிலை பொருட்களை Air Cargo மற்றும் தனியார் விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என கூறியுள்ளது.

இதையும் படிங்க: இலவசமாக 21,000 இருவழி விமான டிக்கெட்டுகளை வழங்கும் கத்தார் ஏர்வேஸ்.!

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தார் 2022 உலகக் கோப்பை: FIFA தலைவருடன் அமீர் சந்திப்பு..!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…