மாலி நாட்டிற்கு மருத்துவ உதவிகளை வழங்கிய கத்தார்.!

Qatar Delivers MedicalAid Mali
Pic: QNA

கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்ள, கத்தார் தொண்டு (Qatar Charity) நிறுவனம் வழங்கிய மருத்துவ மற்றும் தடுப்பு உதவிகளை மாலி நாட்டிற்கு கத்தார் தூதரகம் வழங்கியுள்ளது.

இந்த மருத்துவ உதவிகளை மாலி நாட்டின் கத்தார் தூதர் HE Ahmed bin Abdulrahman Al Sunaidi அவர்கள் மாலி நாட்டின் சுகாதார மற்றும் சமூக விவகார அமைச்சர் டாக்டர் Fanta Siby அவர்களுக்கு வழங்கினார்.

கத்தாரில் முகக்கவசம் அணியாத 111 பேர் மீது நடவடிக்கை.!

இந்த உதவியில், மருத்துவ மற்றும் தடுப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

மாலி தலைநகர் பமாகோவில் உள்ள சுகாதார அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…