ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அதிகரித்து கத்தார் பெட்ரோலியம்.!

Qatar Fuel Prices January
Poc: WOQOD

கத்தார் பெட்ரோலியம் ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை இன்று (31-12-2020) அறிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட, ஜனவரி மாதத்தில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

புதிய விலைப்பட்டியலின் படி, ஜனவரி 01 முதல் பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு QR 1.30 ரியால்களாக விற்பனையாகும். இது டிசம்பர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 10 திர்ஹம்கள் அதிகமாகும்.

இந்தியா, கத்தார் இடையே சிறப்பு விமான சேவைகள் ஜனவரி 31, 2021 வரை நீட்டிப்பு.!

சூப்பர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு QR 1.35 ரியால்களுக்கு விற்பனையாகும்‌. இது டிசம்பர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 10 திர்ஹம்கள் அதிகமாகும்.

மேலும், ஒரு லிட்டர் டீசல் QR 1.30 ரியால்களுக்கு விற்பனையாக உள்ளது. இது அக்டோபர் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 15 திர்ஹம்கள் அதிகமானதாகும்.

இலங்கையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக கத்தாரில் வலுக்கும் எதிர்ப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…