கத்தார் விமான நிலையத்தில் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய தாய் கண்டுபிடிப்பு.!

Qatar Hamad international airport
Pic: File/Reuters

கத்தாரில் கடந்த மாதம் (அக்டோபர் 02) ஹமாத் சர்வதேச விமான நிலையத்தின் லாஞ்ச் சேவை பகுதியில் பிறந்த பெண் குழந்தை கண்டு எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, கத்தார் விமான நிலைய அதிகாரிகள் இந்த குழந்தையின் தாயை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த குழந்தையின் தாய் வேறொரு நாட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டதால் கத்தார் அதிகாரிகள் குழந்தையை கவனித்து வந்தனர்.

FIFA உலகக் கோப்பை: பிரத்தியேகமான கத்தார் ஏர்வேஸ் விமானம்.!

இந்த குழந்தையின் பெற்றோர்கள் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தவறான உறவால் இக்குழந்தை பிறந்துள்ளது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த குழந்தையின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கத்தாருக்குள் கொண்டு வருவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், அந்த பெண்ணை கத்தாருக்கு வரவழைத்து குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…