கத்தார் வரும் பயணிகளுக்கு மறு நுழைவு எளிதாகிறது; தானியங்கி மூலம் அனுமதி.!

Qatar makes re-entry easy
Pic: Qatar Day

கத்தாரில் பயணக் கட்டுப்பாட்டை எளிதாக்கும் விதமாக, கத்தார் செல்பவர்கள் மற்றும் கத்தாரிலிருந்து திரும்பும் பயணிகளுக்கான தானியங்கி விதிவிலக்கான நுழைவு அனுமதி சேவை (automatic exceptional entry permit) நேற்று (27-11-2020) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை 29-11-2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.

தற்போது கத்தார் நாட்டில் வசிக்கும் மற்றும் பயணம் செய்ய விரும்பும் குடியிருப்பாளர்கள் புறப்பட்டவுடன், தானாகவே விதிவிலக்கான நுழைவு அனுமதி பெறுவார்கள் என அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர் கத்தார் புறப்பட்ட பின்னர் எந்த நேரத்திலும் உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளம் மூலம் விதிவிலக்கான நுழைவு அனுமதியை குடியிருப்பாளரோ அல்லது அவர்களின் முதலாளியோ அச்சிட முடியும்.

கத்தாரில் இன்று (நவ.27) புதிதாக 184 பேருக்கு தொற்று உறுதி.!

இனி, Qatar Portal வலைத்தளம் மூலம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. கத்தார் நாட்டிலிருந்து வெளியேறுபவர் பதிவு செய்தவுடன் அனுமதி தானாகவே கிடைக்கும்.

கத்தாருக்கு வெளியே வசிப்பவர்களுக்கு தானியங்கி விதிவிலக்கான நுழைவு அனுமதி சேவை கிடைக்காது என்றும், அவர்கள் கத்தாருக்கு திரும்பி வர விரும்பினால் Qatar Portal வலைத்தளம் மூலம் அனுமதி பெற வேண்டும் என்று GCO கூறியுள்ளது.

GCO கருத்துபடி, நாட்டிற்கு வந்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஒரு வாரத்திற்கு மட்டுமே இருக்கும். பொது சுகாதார அமைச்சின் Green List-ல் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் வீட்டு தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட வேண்டும்.

இந்தியாவில் உள்ள கத்தார் விசா மையங்கள் டிசம்பரில் மீண்டும் திறப்பு.!

பசுமை பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் கட்டாயமாகும். தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளைப் பயன்படுத்துபவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் இரண்டு வாரங்கள் ஆகும். இந்த முடிவு தேசிய மற்றும் சர்வதேச தொற்றுநோயியல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, நாட்டிற்கு வந்தபின் பயணத்திலிருந்து திரும்பி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், பயணி வந்த தேதியிலிருந்து ஆறாவது நாளில் இரண்டாவது சோதனை செய்யப்படும்.

EHTERAZ செயலின் நிலையானது, பயணி வந்த தேதியிலிருந்து ஏழாம் நாள் முடியும் வரை மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் 10வது கட்டாரா பாரம்பரிய தோவ் (கப்பல்) விழா டிசம்பரில் தொடக்கம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…