கத்தாரில் கொரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.!

Qatar hotel quarantine compulsory
Pic: File/The peninsula

கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் கலஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி அவர்கள் நேற்று (03-02-2021) பிற்பகல் அமைச்சரவை அமிரி திவான் தலைமையகத்தில் நடைபெற்ற  அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், COVID-19 பரவலை கட்டுப்படுத்தவும், சுகாதாரம் மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் மாநில அமைச்சரவை 32 அம்ச திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியா உட்பட 20 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு சவுதி அரேபியா தற்காலிக தடை.!

இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் திருமணங்களுக்க்கான கட்டுப்பாடு வருகின்ற (07-02-2021) ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

மாநில அமைச்சரவையின் 32 அம்சத்திட்டங்கள் பின்வருமாறு:

  • அரசுத் துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 80 சதவீதத்திற்கு மேல் தங்கள் பணியிடத்தில் பணிபுரியக்கூடாது, மீதமுள்ள ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணியாற்றலாம்.
  • தனியார் துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 80 சதவீதத்திற்கு மேல் தங்கள் பணியிடத்தில் பணிபுரியக்கூடாது, மீதமுள்ள ஊழியர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பணியாற்றலாம்.
  • அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் 15 நபர்களுக்கு மேல் கூட்டங்களை நடத்தக்கூடாது.
  • அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம்  அணிந்திருக்க வேண்டும்.
  • அனைத்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது EHTERAZ பயன்பாட்டை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
  • தினசரி பிரார்த்தனை மற்றும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்காக மசூதிகள் திறந்திருக்கும், அதே சமயத்தில் கழிப்பறைகள் மற்றும் உளூச்செய்யும் இடங்கள் மூடப்பட்டிருக்கும்.
  • மூடிய இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது, திறந்த இடங்கள் மற்றும் இரங்கல் கூட்டங்களில் 15 பேருக்கு மேல் கூடக்கூடாது.
  • குளிர்கால முகாம்களில் 15 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது.
  • வீட்டில் அல்லது மஜ்லிஸ்களில் நடைபெறும் திருமணங்களைத் தவிர்த்து, மறு அறிவிப்பு வரும் வரை திருமண விருந்துகளை மூடிய மற்றும் திறந்தவெளிகளில் நடத்தக்கூடாது.
  • மூடிய இடங்களில் 10க்கும் மேற்பட்டவர்களும், திறந்தவெளியில் 20 பேரும் கலந்து கொள்ளலாம் மற்றும் வாழ்க்கைத் துணையின் உறவினர்கள் திருமண தேதி மற்றும் இடத்தை  உள்துறை அமைச்சகத்திடம் அறிவிக்க வேண்டும்.
  • அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதாக உறுதியளிக்க வேண்டும்.
  • பொது பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் கார்னிச் போன்றவற்றில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களில் 15 பேருக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது.
  • ஒரு வாகனத்தில் ஓட்டுநர் உட்பட நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாது.
  • பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மெட்ரோ சேவைகள் மற்றும் பொதுப்போக்குவரத்தை 30 சதவீதத்திற்கு மிகாமல் செயல்படலாம்.
  • ஓட்டுநர் பள்ளிகளில் திறனை 25 சதவீதமாக குறைத்துள்ளது.
  • சினிமாக்கள் மற்றும் திரையரங்குகள் 30 சதவீதத்திற்கு மேல் செயல்படக்கூடாது மற்றும் 18 வயதிற்குட்பட்ட நபர்களை  அனுமதிக்கக்கூடாது.
  • கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களின் திறனை 30 சதவீதமாக குறைத்துள்ளது.
  • நர்சரிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு திறனை 30 சதவீதமாக குறைத்துள்ளது.
  • பொது அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களின் திறனை 50 சதவீதமாக குறைத்துள்ளது.
  • சிறப்புத் தேவை உள்ளவர்களுக்காக நியமிக்கப்பட்ட மையங்களில் தனிப்பட்ட கல்வி அமர்வுகள் மட்டுமே நடத்த அனுமதி அளித்துள்ளது.
  • தொழில்முறை விளையாட்டுக் குழுக்களுக்கான பயிற்சி திறந்தவெளியில் 40 பேருக்கும் மற்றும் மூடிய இடங்களில் 20 பேருக்கும் மட்டுமே அனுமதி அளித்துள்ளது, பார்வையாளர்களின் இருப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.
  • உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கமைக்க பொது சுகாதார அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும், அதே சமயத்தில் மூடிய இடங்களில் பொதுமக்கள் வருவதைத் தடைசெய்தல் மற்றும் திறந்தவெளியில் 20 சதவீதத்திற்கு மிகாமல் இருப்பதை அனுமதித்துள்ளது.
  • கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை நடத்த பொது சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.
  • வணிக வளாகங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் பணிகளைத் தொடரலாம், வணிக வளாகங்களில் உள்ள அனைத்து உணவகங்களை மூடுவதுடன், இந்த உணவகங்களுக்கு வெளி ஆர்டர்களை செய்ய அல்லது உணவகத்திற்குள் மட்டுமே வழங்க அனுமதித்துள்ளது.
  • உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் 15 சதவீதத்திற்கு மிகாமல் உட்புறங்களில் உணவு மற்றும் பானங்களை வழங்க அனுமதித்துள்ளது, திறந்தவெளிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் உணவு மற்றும் பானங்கள் வழங்க அனுமதித்துள்ளது.
  • படகுகள், சுற்றுலா படகுகள் மற்றும் இன்ப படகுகள் வாடகைக்கு எடுப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் தனிப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் பயன்படுத்தினால் 15க்கும் மேற்பட்டவர்கள் கப்பலில் செல்ல அனுமதி இல்லை.
  • பிரபலமான சந்தைகளின் திறனை 50 சதவீதமாக குறைத்துள்ளது.
  • மொத்த சந்தைகளின் திறனை 30 சதவீதமாக குறைத்துள்ளது.
  • சிகையலங்கார நிபுணர் (hairdressing) மற்றும் அழகு நிலையங்களின் திறனை 30 சதவீதமாக குறைத்துள்ளது.
  • மூடிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும்  பொழுதுபோக்கு மையங்களை மூட வேண்டும், திறந்தவெளியில் 30 சதவீதத்திற்கு மிகாமல் வேலை செய்ய அனுமதித்துள்ளது.
  • சுகாதார கிளப்புகள் மற்றும் உடல் பயிற்சி கிளப்புகள் 30 சதவீதத்திற்கு மிகாமல் வேலை செய்ய அனுமதித்துள்ளது, 5 ஸ்டார் ஹோட்டல்களில் 30 சதவீதத்திற்கு மிகாமல் மசாஜ் சேவைகளை தொடர அனுமதித்துள்ளது, saunas, நீராவி அறைகள், Jacuzzi சேவைகள் மற்றும் மொராக்கோ மற்றும் துருக்கிய குளியல் அறைகள் போன்றவற்றை மூட வேண்டும்.
  • அனைத்து உட்புற நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்களை மூட வேண்டும் மற்றும் 30 சதவீதத்திற்கு மிகாமல் வெளிப்புற நீச்சல் குளங்கள் மற்றும் நீர் பூங்காக்கள்  செயல்பட அனுமதித்துள்ளது.

மேலும், COVID-19 முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அமைச்சரவை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.