சவுதி அரேபியா பட்டத்து இளவரசருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கத்தார் அமீர்.!

Saudi arabia historical sites
Pic: @spagov

சவுதி அரேபியாவில் உள்ள அல் உலா (Al Ula) நகரில் நேற்று (05-01-2021) நடைபெற்ற 41வது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டில் வளைகுடா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர அல் உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

சவுதியில் நடைபெற்ற 41வது GCC உச்சி மாநாட்டின் இறுதி அறிக்கை.!

பின்னர், ஊடகங்களுக்கு உரையாற்றிய சவுதி வெளியுறவு அமைச்சர் விமானங்களை தொடங்குவது உட்பட கத்தார் நாட்டுடனான உறவை மீட்டெடுக்க நான்கு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மற்றும் சவுதி அரேபியா பட்டத்து இளவரசரும், துணை பிரதமரும் மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான HRH முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் ஆகியோர் நேற்று அல் உலா Governorate-ல் உள்ள பல்வேறு வரலாற்று தளங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

வீட்டு பணியாளர்களின் விசா விண்ணப்பங்களை பெறும் கத்தார் விசா மையம்.!

இந்த பயணத்தில், கத்தார் அமீருடன் அதிகாரபூர்வ தூதுக்குழுவின் பல உறுப்பினர்கள், ஏராளமான இளவரசர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Telegram