S’hail 2020 கண்காட்சி: கத்தார் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.!

S'hail 2020 exhibition
Pic: QNA

கலாச்சார கிராம அறக்கட்டளை கட்டாராவில் (Katara) உள்ள அல் ஹிக்மா சதுக்கத்தில் நடைபெற்ற சர்வதேச Hunting மற்றும் Falcons கண்காட்சியை (S’hail 2020) கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி அவர்கள் நேற்று (22-10-2020) காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

கத்தார் பிரதமர் கண்காட்சியை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின், அவருக்கு உள்ளூர், அரபு மற்றும் சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஆயுதங்கள், வேட்டை பொருட்கள் குறித்து விளக்கப்பட்டது.

இதையும் படிங்க: கத்தார் MoPH குறைந்த ஆபத்துள்ள 49 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

மேலும், வேட்டை விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் கலைப்படைப்புகள் குறித்தும் கத்தார் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…