கத்தாரில் வாகன தொழில்நுட்ப சோதனையை மேற்கொள்ள தற்காலிக நிலையம் அமைப்பு.!

Technical inspection vehicles
Pic: The Peninsula

கத்தார் பல்கலைக்கழகத்தின் வடக்கே உள்ள Wadi Al Banat பகுதியில் வாகனங்களின் தொழில்நுட்ப சோதனையை மேற்கொள்ள தற்காலிக மொபைல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கும் என கத்தார் உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் நிலவும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு QMD அறிவுறுத்தல்.!

இந்த நிலையம் உடனடி மற்றும் சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும், பார்வையாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்குவதற்கும் உள்துறை அமைச்சகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக வந்துள்ளது என உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து இயக்குநரகம் நேற்று (17-01-2021) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தினமும் சுமார் 1,000 வாகனங்களைப் பெறும் Wadi Al-Banat நிலையத்தின் அழுத்தத்தைக் குறைக்க இந்த நிலையம் பங்களிக்கும் என்றும்,  இது தொழில்நுட்ப ஆய்வு செயல்முறையின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் களைகட்டும் 12வது சர்வதேச Falconry மற்றும் Hunting விழா.!