கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (05-11-2020) இராணுவ போலீஸ் படைகளின் கட்டளை முகாமின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தேசிய கீதம் இசைக்கப்பட்டபின், கத்தார் அமீர் அவர்களை அணிவகுப்பை பார்வையிடுமாறு அணிவகுப்பின் தளபதி கோரினார்.
பின்னர், தரைப்படை, குதிரைப்படை மற்றும் வாகனங்கள் மற்றும் போர், பாதுகாப்பு திறன்களின் பல இராணுவ காட்சிகளுடன் விழா தொடங்கியது.
கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3 பேர் கைது.!
அதன்பின், கத்தார் அமீர் அவர்கள் கள சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், அப்போது அவருக்கு முகாமில் உள்ள வசதிகள் மற்றும் நேரடி துப்பாக்கி சூடு வரம்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்த தொடக்க விழாவில், கத்தார் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான Dr. Khalid bin Mohammed Al Attiyah மற்றும் கத்தார் ஆயுதப்படைகளின் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கத்தாரில் நேற்று மழை வேண்டி சிறப்பு தொழுகை; அமீர் நாட்டு மக்களுடன் பங்கேற்பு.!
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…