கத்தாரில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!

A rainbow as seen from Corniche some time around 5pm, today on April 26. Image Source: TPQ

கத்தாரில், இன்று (26-04-2020) இரவு முதல் அதிகாலை 6 மணி வரை வானிலையானது கடற்கரை அருகில் மேகமூட்டமாக காணப்படும் என்றும், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில நேரங்களில் இடியுடன் கூடிய, சற்று தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தனது தினசரி வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், ஓரளவு மேகமூட்டமாகவும், பலத்த மழையுடன் சில நேரங்களில் இடியுடன் கூடியதாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source : TPQ