கத்தாரில் நாளை டிசம்பர் (18-12-2020) வெள்ளிக்கிழமை தேசிய தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது.
இதனை முன்னிட்டு, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் பல சிறைக் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமிரி திவான் நேற்று (16-12-2020) அறிவித்துள்ளது.
கத்தார் தேசிய தினம்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.!
கத்தார் அமீர் அவர்கள், புனித ரமலான் மாதத்திலும், இந்த வருட தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் போதும் சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் உத்தரவை பிறப்பித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் கத்தார் அமீர் அவர்கள் தேசிய தின கொண்டாட்டத்தின் போது பல கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், மன்னிப்பு வழங்கப்படும் கைதிகளின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் செய்த குற்றங்களின் விவரங்கள் குறித்து அதிகாரிகள் எந்தவித செய்தியும் வெளியிடவில்லை.
கத்தாரில் இன்று (டிச.17) புதிதாக 140 பேருக்கு தொற்று உறுதி.!
HH the Amir issued an Amiri gesture pardoning a number of prisoners, on the occasion of the National Day. #QNA pic.twitter.com/ELdHa7Ms8H
— Qatar News Agency (@QNAEnglish) December 16, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…