கத்தார் நாட்டில் WOQOD வலையமைப்பு தனது 105 வது பெட்ரோல் நிலையத்தை Al Maamoura பகுதியில் திறந்துள்ளது.
இதுகுறித்து, WOQOD நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாத் ரஷீத் அல் முஹன்னடி (Saad Rashid Al Muhannadi ) அவர்கள் கூறுகையில், பெட்ரோலிய பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்கும் இலக்கை அடைவதற்கும் WOQOD நாட்டில் தனது பெட்ரோல் நிலைய வலையமைப்பை விரிவுபடுத்த விரும்புகிறது என்றார்.
மேலும், நாட்டின் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதிய பெட்ரோல் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான பணிகளை WOQOD சமீபத்தில் துரிதப்படுத்தியுள்ளாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த, பெட்ரோல் நிலையத்தில் மூலம் கீழ்க்கண்ட சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது :
1. 24 மணி நேரமும் சேவை.
2. Sidra வசதியான கடை சேவை.
3. Manual கார் சுத்திகரிப்பு சேவை.
4. ஆயில் மாற்றுதல் மற்றும் வாகன டயர் பழுதுபார்த்தல்.
5. இலகுரக வாகனங்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் விற்பனை.