ஓமனில் 100 ஆண்டுகள் பழைமையான மரம் கண்டுபிடிப்பு.!

Pic: Gulf Today

ஓமன் நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள அல் அய்ன் பகுதியில் மலகத் என்ற இடத்தில் அல் சார (Al-Sarh) என்ற 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரம் பாறைகளுக்கு இடையே வளர்ந்துள்ளது. பொதுவாக இந்த வகை மரம் ராசல் கைமா பகுதியில் மட்டுமே வளரக் கூடியதாகும். அல் அய்ன் பகுதியில் வளர்ந்துள்ள இந்த மரம் குறித்த தகவல் நீண்ட காலமாக தெரியாமல் இருந்துள்ளது.

இந்த மரத்தின் இலைகளை பொதுமக்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த தகவலை சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் வன மேம்பாட்டு ஏஜென்சி 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: தமிழக ஊடகங்கள்.