COVID-19: கத்தாரில் இதுவரை 55,000க்கும்  மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.!

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 1,956 நபர்கள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் ‌(MoPH)  இன்று (13-06-2020) அறிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 55,252ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அப்டேட் (ஜூன் 13): கத்தாரில் புதிதாக 1,828 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 6,165 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது.மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 2,86,830 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.