கத்தாரில் 72 மணி நேரத்தில், 3,000 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வசதி.!

3000-bed quarantine facility ready in 72 hours in Qatar. Image Source : TPQ

கத்தாரில், பொது சுகாதார அமைச்சகத்தின் வேண்டுகோளின் பேரில், பொதுப்பணி ஆணையம் (Ashghal) 72 மணி நேரத்துக்குள், 3,000 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ வளாகத்தை அமைத்துள்ளது. மேலும், விரைவில் 8,500 படுக்கைகள் கொண்ட மையத்தை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அஷ்கால் தனது ட்விட்டர் பதிவில், உம் ஸ்லாலில் உள்ள இந்த வளாகம் 12,500 படுக்கைகளுக்கு இடமளிக்கும் எனக் கூறியுள்ளது.

மேலும், இதுகுறித்து BPD Eng. Fatima Al Meer கூறுகையில், உம் ஸ்லாலில் உள்ள மருத்துவ தனிமைப்படுத்தப்பட்ட வளாகம் 12,500 படுக்கைகளுக்கு இடமளிக்கும். இந்த தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்தில், Ipadகளுடன் கூடிய பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் 600 பேர் தங்குவதற்கு பொழுதுபோக்கு வசதியும் உள்ளது. மேலும், இருக்கைகளுக்கு பாதுகாப்பாக சமூக தூரத்தை கருத்தில் கொண்டு, 900 பேருக்கு சேவை செய்ய ஒரு சாப்பாட்டு அறையும் இதில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சப்ளையர்கள் உள்ளிட்ட தனியார் துறைக்கு அவர்களின், திறமையான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புக்காக அதிகாரி நன்றி தெரிவித்துள்ளார்.