கத்தாரில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு.!

flu vaccine Qatar
Pic: The Peninsula Qatar

கத்தாரில் கொரோனா வைரஸ் (COVID-19) உறுதிப்படுத்தப்பட்ட 38 புதிய வழக்குகளை பொது சுகாதார அமைச்சகம் இன்று (16-03-2020) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 439ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், பெரும்பாலானவை தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுடன் தொடர்பானவை என்றும், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பிய கத்தார் குடிமக்கள் 3 வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 8,375 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் தேவையான சுகாதார சோதனைகளை பொது சுகாதார அமைச்சின் திறமையான அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.