கத்தாரில் ஹஜ் பெருநாள் தொழுகை 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் நடைபெறும்.!

Pic: The Peninsula

ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் தொழுகை கத்தாரில் 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் (Prayer Ground) நடைபெற உள்ளதாக Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களின் பெயர், எண், இடம் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டியலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று முதல் மேலும் 300 மசூதிகள் திறப்பு.!

மேலும், வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் 200 மசூதிகளின் பட்டியலையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது COVID-19 கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிகள் பாங்கு (Adhan) அழைப்போடு திறக்கப்படும் என்றும், (பிரச்சாரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பு) தொழுகை முடிந்த 10 நிமிடங்களுக்கு பிறகு மசூதிகள் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரச்சாரம் மற்றும் பிரார்த்தனைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மசூதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதிகளில் பிரார்த்தனை செய்ய வருபவர்கள் அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சகம் நினைவூட்டியுள்ளது.

மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வீடுகளில் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கத்தாரில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் மசூதிகள், பிரார்த்தனை மைதானங்களின் பட்டியல் மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் மசூதிகளின் பட்டியல் ஆகியவற்றை கீழே உள்ள அமைச்சகத்தின் ட்வீட் வழியாக சென்று பெறலாம்.

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar