கத்தாரில் கடந்த மூன்று மாதங்களில் 4,300 கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றம்.!

4,300 abandoned vehicles removed in 3 months
Photo: The Peninsula Qatar

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MME) கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவதற்கான கூட்டுக் குழு நேற்று முன்தினம் (27-09-2020) அல் வக்ரா (Al Wakra) நகராட்சியில் கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது.

கத்தார் அல் வக்ரா நகராட்சியில் கைவிடப்பட்ட 900 வாகனங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தனர்.

கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றுவதற்காக வாகனத்தின் உரிமையாளர்களுக்கு ஒரு சலுகைக் காலம் வழங்கிய பின்னரே, கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது ஒரு வார காலத்திற்கு நீடிக்கும்.

Pic:MME
Pic:MME

மேலும், இந்த குழு கடந்த மூன்று மாதங்களில் கைவிடப்பட்ட சுமார் 4,300 வாகனங்களை அகற்றியுள்ளதுடன் மொத்தமாக 8,300 கைவிடப்பட்ட வாகனங்களை வெவ்வேறு நகராட்சிகளில் இருந்து இந்த ஆண்டு அகற்றியுள்ளது.

ஜூலை 2020-இல் தொடங்கப்பட்ட ஆறாவது நடவடிக்கை குறித்த விவரங்களை குழு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் அல் வக்ராவில் நடைபெற்ற கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றும் நடவடிக்கையின் போது தெரிவித்தனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…