கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 540 டன்‌ உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.!

540 tonnes of local vegetables sold in Sept
Pic: MME

கத்தாரில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரீமியம் கத்தார் மற்றும் கத்தார் பண்ணைகள் திட்டம் ஆகியவற்றின் மூலம் சுமார் 540.883 டன் உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனையாகி உள்ளது.

கத்தார் பண்ணைகள் திட்டம் மூலம் 303.660 டன் காய்கறிகளை விற்பனையாகி உள்ளது என்றும், பிரீமியம் கத்தார் பண்ணைகள் திட்டத்தின் மூலம் 237.223 டன் காய்கறிகள் விற்பனையாகி உள்ளது என்றும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் கார்களில் விலை உயர்ந்த பொருட்களை திருடி வந்த நபர் கைது.!

மேலும், உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் திட்டத்தை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கண்காணிக்கின்றது.

இந்த இரண்டு திட்டங்களும், கத்தார் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், மேலும் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்கும் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் ஷூவுக்குள் மறைத்து கடத்த முயன்ற போதை மாத்திரைகள் பறிமுதல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…