கத்தார் – சவுதி எல்லை திறந்த மூன்றே நாளில் இத்தனை வாகனங்கள்…அடேங்கப்பா.!

Abu Samra border crossing
Pic: Qatar Customs

கத்தார், சவுதி அரேபியா இடையே உள்ள Abu Samra எல்லை மீண்டும் திறக்கப்பட்ட மூன்று நாட்களில் சுமார் 930 வாகனங்கள் கடந்து சென்றதுள்ளதாக கத்தார் சுங்கம் அறிவித்துள்ளது.

திறக்கப்பட்ட முதல் மூன்று நாட்களிலேயே எல்லை வழியாக 835 வாகனங்கள் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளது என்றும், 95 வாகனங்கள் கத்தாருக்குள் நுழைந்துள்ளது என்றும் சுங்கம் தெரிவித்துள்ளது.

தோஹாவில் உள்ள இந்த பகுதி மூடப்படுவதாக பொதுப்பணி ஆணையம் அறிவிப்பு.!

கொரோனா தொற்றுநோய் காரணமாக அபு சாம்ரா எல்லையில் அனைத்து வருகையாளர்களிடமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன என்றும், அவை கத்தாரின் தற்போதைய COVID-19 பயண மற்றும் திரும்பக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே நில வழி, வான் வழி மற்றும் கடல் வழி எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சவுதி சுங்கம் தங்கள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளது.

அல்-உலா ஒற்றுமை ஒப்பந்தத்தில் வளைகுடா தலைவர்கள் கையெழுத்திட்ட பின்னர், கத்தார் உடனான அனைத்து உறவுகளையும் சவுதி அரேபியா மீட்டெடுப்பதாக கூறியுள்ளது.

மூன்று ஆண்டுக்கு பின் சவுதி ஏர்லைன்ஸ் முதல் விமானம் கத்தாரில் தரையிறங்கியது.!

த்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…