கத்தாரில், Al Meera அதன் புதிய கிளையினை தி மாலில் திறந்துள்ளது.!

Al Meera opens a new branch at The Mall.

அல் மீரா (Al Meera) நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் தனது புதிய கிளையை தி மாலில் (The Mall) திறந்துள்ளது. இந்த புதிய கிளை அல் மீராவின் விரிவாக்க திட்டத்தில் ஒரு முக்கியமானதாகும். மேலும், அதன் கிளைகளின் மொத்த எண்ணிக்கையை 55ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலைமை மற்றும் COVID-19 பரவலைத் தவிர்ப்பதற்கு நாட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, புதிய கிளை திறப்பு வழக்கமான நிகழ்வாக நடைபெறவில்லை. இருப்பினும், அல் மீரா நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Yousef Ali Al Obaidan மற்றும் மத்திய நகராட்சி மன்ற உறுப்பினர் Sheikha Al Jufairi ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த புதிய கிளை 1,800 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில், அல் மீராவின் தரம் மற்றும் ஒருங்கிணைந்த ஷாப்பிங் அனுபவத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. புதிய கிளை அல்-அஹ்லி மைதானத்திற்கு முன்பாகவும் தி மால், டி-ரிங் வீதியிலும் அமைந்துள்ளது.

புதிய கிளை இன்றைய COVID-19 இன் சவாலான சூழ்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் மற்றும் தயாரிப்புக்களை இலகுவாக அணுக வழிவகுக்கின்றது. அல் மீரா அதன் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் சில கிளைகளை திறக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கத்தாரில் அதிகமான மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களின் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலுக்கு மேலும் பங்களிக்க அல் மீரா நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.