கத்தாரில் Al Zaeem Air கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா: அமீர் பங்கேற்பு.!

Al Zaeem Air College
Pic: QNA

Al Udeid விமான தளத்தில் உள்ள Al Zaeem (Leader) Mohamed Bin Abdullah Al Attiyah ஏர் கல்லூரியின் 8ம் தொகுதி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று (27-01-2021) சிறப்பாக நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில், கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி மற்றும் பிரதமரும், உள்துறை அமைச்சருமான HE ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கத்தார் அமீர் நாடாளுமன்ற சங்கத் தலைவருடன் சந்திப்பு.!

இந்த விழாவில், பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள், அமிரி காவலர், மாநில பாதுகாப்பு பணியகம் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் Al Zaeem (Leader) Mohamed Bin Abdullah Al Attiyah ஏர் கல்லூரியின் 8ம் தொகுதி மாணவர்களின் முதல் பத்து சிறந்த பட்டதாரிகளை கெளரவித்தார்.

கத்தார், இந்தியா இடையே வர்த்தகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்; இந்திய தூதர்.!