கத்தாரில் ஒரு பள்ளியை தவிர, மற்ற அனைத்து பள்ளிவாசல்களும் ரமலான் மாதத்திலும் மூடல்.!

கத்தார் நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் எதிர்வரும் ரமலான் மாதத்திலும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்பதாக கத்தார் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகம் (Awqaf) அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலில் இருந்து, Imam Muhammad ibn Abd al-Wahhab பள்ளிவாசல் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை பிரத்தியேகமாக 40 பேர் (இமாம்கள் மற்றும் மசூதியின் ஊழியர்கள் உட்பட) முன்னிலையில் மட்டுமே நடைபெறும் என்றும் மேலும், ரமலான் மாத இஷா தொழுகை மற்றும் தராவீஹ் தொழுகைகளும் Imam Muhammad ibn Abd al-Wahhab பள்ளிவாசலில் மட்டும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகைகள் கத்தாரின் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேனல்களில் ஒலிபரப்பு செய்யப்படும் என்றும் மேலும், இதனைக் கேட்டு பிரார்த்தனை செய்ய அனுமதி இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.