கத்தார் அமீர் தலைமையில், SCEAI இன்‌ இரண்டாவது கூட்டம்.!

கத்தாரில், 2020 ஆம் ஆண்டின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் முதலீட்டுக்கான உச்ச கவுன்சிலின் (SCEAI) இரண்டாவது கூட்டம் நேற்று (13-04-2020) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது.

பொருளாதார விவகாரங்கள் மற்றும் முதலீட்டுக்கான உச்ச கவுன்சிலின் தலைவர் கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

Image Source : Gulf Times.

இந்த கூட்டத்தில், கவுன்சிலின் துணைத் தலைவர் மற்றும் துணை அமீர்ருமான H.H ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி‌ அவர்களும் மற்றும் பிரதமரும் உள்துறை அமைச்சருமான H.E ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜீஸ் அல் தானி சபையின் நிர்வாக உறுப்பினர் மற்றும் சபையின் பிற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நிரலில் தலைப்புகள் குறித்து கவுன்சில் விவாதித்தது மற்றும் அது தொடர்புடைய பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், பல தலைப்புகளில் உருவாக்கப்பட்ட பல விளக்கங்களையும் கவுன்சில் மதிப்பாய்வு செய்துள்ளது.