கத்தார் அமீர், குவைத் அமீரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.!

Pic: Qatar Day

குவைத் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் பல மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நேற்று (18-07-2020) சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று
மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குவைத் அமீரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

மேலும், குவைத் அமீர் அவர்கள் செழிப்புடனும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிராத்திப்பதாக கத்தார் அமீர் அவர்கள் தெரிவித்தார்.