பஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு கத்தார் அமீர் இரங்கல்.!

Indonesian flight crash
Pic: iloveqatar.net

உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் நாட்டின் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அவர்கள் இன்று (11-11-2020) காலமானார்.

84 வயதான ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் காலமானார் என அந்நாட்டு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் காலமானார்..!

அமெரிக்காவிலிருந்து அவரது உடல் சொந்த வீட்டிற்கு வந்தபின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் மறைந்த பஹ்ரைன் பிரதமரின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சொர்க்கத்தில் அவர் நிம்மதியாக ஓய்வெடுக்க சர்வவல்லமையுள்ள இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என அமீர்‌ இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

மறைந்த பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா உலகின் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற பெருமைக்குரியராவார்.

கத்தாரில் இந்த ஆண்டு இறுதி அல்லது 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் COVID-19 தடுப்பூசிகளைப் பெற முடியும்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…