கத்தார் அமீர் மூன்று நாடுகளுக்கு அவசர மருத்துவ உதவியை அனுப்ப உத்தரவு.!

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயை எதிர்த்து போராட துனிசியாவில் உள்ள சகோதரர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவாக, துனிசியாவின் சகோதர குடியரசிற்கு அவசர மருத்துவ உதவியை அனுப்புமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Sheikh Tamim bin Hamad al Thani) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை எதிர்த்து போராட நேபாளம் மற்றும் ருவாண்டா நாடுகளில் உள்ள நண்பர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவாகவும், நேபாளம் மற்றும் ருவாண்டாவிற்கு அவசர மருத்துவ உதவிகளை அனுப்பவும் அமீர் உத்தரவிட்டுள்ளார்.

Source : Gulf Times