கத்தார் அமீர், ஈராக்கிற்கு இரண்டு கள மருத்துவமனைகள் அனுப்ப உத்தரவு.!

Pic: Qatar Tribune

கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான H E ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி அவர்கள் நேற்று (20-07-2020) ஈராக் பிரதமர் H E முஸ்தபா அல் காதிமி (Mustafa Al Kadhimi) அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த உரையாடலில், இருதரப்பு உறவுகள் பற்றியும், பல்வேறு துறைகளில் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றியும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஈராக்கின் முயற்சிகளுக்கு ஆதரவாக, வெவ்வேறு மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்ட இரண்டு கள மருத்துவமனைகளை அனுப்புமாறு கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கத்தார் பிரதமர் ஈராக் பிரதமரிடம் கூறியுள்ளார்.

மேலும், COVID-19 பரவலை கட்டுப்படுத்த
ஈராக்கிற்கு கத்தார் அரசு வழங்கும் ஆதரவுக்கு ஈராக் பிரதமர் கத்தார் அமீர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.