கத்தார் அமீர், அமெரிக்க அதிபருடன் தொலைபேசி உரையாடல்.!

கத்தார் நாட்டின் அமீர் H.H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (05-03-2020) மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தினார்.

இந்த உரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய (strategic)
உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவர்களை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும், கத்தார் அரசால் மத்தியஸ்தம் (mediated) செய்யப்பட்ட அமெரிக்காவிற்கும், ஆப்கானிஸ்தான் தலிபானுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் நிலைமைகளின் முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.