கத்தார் அமீர் இந்திய தூதருக்கு அல் வாஜ்பா அலங்காரம் வழங்கி கெளரவிப்பு.!

Pic: Twitter/QNA

கத்தார் இந்திய தூதர் P. குமாரன் அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (01-07-2020) காலை தனது அமிரி திவான் அலுவலகத்தில் இந்திய தூதரைச் சந்தித்தார்.

கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய தூதருடன் சந்திப்பு.!

கத்தார் நாட்டிற்கும் மற்றும் அவரது நாட்டிற்ககும் இடையிலான உறவை மேம்படுத்துவதில் அவர் வகித்த பங்கை அங்கீகரிப்பதற்காக கத்தார் அமீர் அவர்களின் சிறப்பான அல் வாஜ்பா (Al Wajbah) அலங்காரத்தை வழங்கி கெளரவித்தார். மேலும், அவரின் எதிர்கால பணிகள் வெற்றிபெறவும் வாழ்த்தினார்.

Source: The Peninsula Qatar