கத்தார் அமீர், சல்வா பீச் ரிசார்ட்டுக்கு ஆய்வு மேற்கொண்டார்.!

Image Credits: QNA

கத்தார் தென்மேற்கில், 3.2 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சல்வா பீச் ரிசார்ட்டுக்கு (Salwa Beach Resort) அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (03-07-2020) ஆய்வு மேற்கொண்டார். இந்த‌ திட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் நிலைகள் குறித்து அமீர் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த சுற்றுலா வசதியை நிர்மாணிப்பதில் திட்டத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமீர் நன்றி தெரிவித்தார். மேலும், கத்தார் மாநிலத்தில் கடல் சுற்றுலா மற்றும் ஓய்வு தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அதில் சுற்றுலாத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் அதன் நிறைவு மற்றும் திறப்பை விரைவுபடுத்துமாறும் அமீர் அறிவுறுத்தினார்.

Source: The Peninsula Qatar