கத்தார் அமீர் GCC-யின்‌ பொதுச் செயலாளரை சந்தித்தார்..!

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் புதிய பொதுச் செயலாளரான டாக்டர் நயீப் பின் ஃபலாஹ் அல்-ஹஜ்ரஃப் (Dr Nayef bin Falah al-Hajraf) அவர்களை அமிரி திவானில், நேற்று (26-02-2020) கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி (Sheikh Tamim bin Hamad al-Thani)‌ அவர்கள் சந்தித்தார்.

இந்த சந்திப்பில், கத்தார் அமீர் பொதுச்செயலாளரை வாழ்த்தினார். மேலும், ஜி.சி.சி நாடுகளில் மக்களின் கூட்டு நலன்களுக்கு சேவை செய்வதில் அவரது பங்கை சிறப்பாக வாழ்த்துவதாகவும், ஜி.சி.சி யின் ஒற்றுமைக்கு கத்தார் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.

பின்னர், ஜி.சி.சி யின் பொதுச்செயலாளர் அமீருக்கும், கவுன்சிலுக்கு ஆதரவளிப்பதில் கத்தார் வகித்த பங்கிற்கும் நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.