கத்தார் அமீர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு.!

Pic: Twitter/QNA

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) உறுப்பினரான கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (17-07-2020) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற 136வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றார்.

IOC-இன் தலைவர் டாக்டர் தாமஸ் பாக் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், நிர்வாக சபை உறுப்பினர்கள், IOC உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச கூட்டமைப்புகள் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுக்களின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அதன் நிகழ்ச்சி நிரலில் தலைப்புகளை மதிப்பாய்வு செய்து அவை தொடர்பான பொருத்தமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pic: Twitter/QNA

கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர்
HE Sheikh Joaan bin Hamad Al-Thani அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Dailyhunt
http://dhunt.in/9gu6K?s=a&ss=pd