சீன அதிபரிடமிருந்து எழுத்துப்பூர்வ செய்தியை பெற்றார் கத்தார் அமீர்.!

Amir receives message China
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று ‌(20-02-2021) சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) அவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ செய்தியை பெற்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை  மேம்படுத்துவதற்கு உண்டான வழிகள், பரஸ்பர அக்கறையின் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்த எழுத்துப்பூர்வ செய்தியில் இடம்பெற்றிருந்தது.

கத்தாரின் சில பகுதிகளில் பரவலான மழை.! (காணொளி)

அரசியல் பணியகத்தின் உறுப்பினரும், CPC மத்திய குழுவின் வெளியுறவு ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான HE Yang Jiechi என்பவரிடம் இருந்து இந்த எழுத்துப்பூர்வ செய்தியை கத்தார் அமீர் பெற்றார்.

கத்தார் அல் பஹ்ர்  (Al Bahr Palace) அரண்மனையில் உள்ள கத்தார் அமீரின் அலுவலகத்தில் HE Yang Jiechi மற்றும் அவருடன் வந்த பிரதிநிதிகளையும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் சந்தித்தார்.

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் கடத்த முயற்சி.!