கத்தார் QNTC தோஹா கண்காட்சியை அமீர் பார்வையிட்டார்.!

Amir visits Doha Jewellery and Watches Exhibition.

கத்தார் தேசிய சுற்றுலா சபை (QNTC) ஏற்பாடு செய்த, 17வது தோஹா ஜூவல்லரி மற்றும் வாட்ச் கண்காட்சியை (DJWE) கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் பார்வையிட்டார்.

தோஹா ஜூவல்லரி மற்றும் வாட்ச் கண்காட்சியின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அமீர், கத்தார் மற்றும்
சர்வதேச நிறுவனங்களின் நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் ரத்தினக் கற்களின் சமீபத்திய வடிவமைப்புகளைக் கண்டார்.

மேலும், கத்தாரில் உள்ள நகை வடிவமைப்பாளர்களின் சில படைப்புகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்ததையும் அமீர் பார்வையிட்டார்.