ஈத் அல் அத்ஹா 2020: கத்தாரில் அரசு மற்றும் பொது நிறுவனங்களுக்கு விடுமுறை நாட்கள் அறிவிப்பு.!

Pic: iloveqatar.net

இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளில் ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். தற்பொழுது இந்த வருடத்தில் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாடப்பட இருப்பதாக வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, கத்தார் அமிரி திவான் இன்று (26-07-2020) அமைச்சகங்கள், அரசு மற்றும் பொது நிறுவனங்களுக்கு விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.

அதன்படி, வருகின்ற ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 6 வரை அமைச்சகங்கள், அரசு மற்றும் பொது நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் ஆகஸ்டு 9ஆம் தேதி பணிக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்தார் மத்திய வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் விடுமுறை நாட்களை  கத்தார் மத்திய வங்கி முடிவுசெய்யும் என கூறப்பட்டுள்ளது.