கத்தார் நாட்டில் உள்ள மசூதிகளை மூட உத்தரவு.!

Photo by Qassim Rahmatullah Image Source : TPQ

கொரோனா வைரஸ் (COVID-19) அச்சுறுத்தல் காரணமாக கத்தாரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐந்து வேளை தொழுகை மற்றும் ஜும்மா தொழுகை போன்றவற்றை, இன்றைய தினம் (17-03-2020) லுஹர் தொழுகை முதல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தி வைக்கும்படி, இஸ்லாமிய விவகார அமைச்சகம் (Awqaf) அறிவுறுத்தியுள்ளது.

கத்தாரில் தினமும் பிரார்த்தனைகளில், ஈடுபடும் வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. அனைவரும் தங்களது ஐந்து வேளை தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பள்ளிவாசல்களில் பாங்கு (ATHAN) ஓசை ஒலிக்கும் என்பதோடு, தொற்றுநோய் அச்சுறுத்தல் நீங்கியவுடன் மசூதிகளை மீண்டும் திறக்க திறமையான அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.