கத்தார் பிரியாணி திருவிழாவில் உணவுப் போட்டி.!

கத்தார் நாட்டில், அல் பிடா பூங்காவில் (Al Bidda Park) நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரியாணி மற்றும் கபாப் திருவிழாவில் இன்றும் (05-03-2020), நாளையும் (06-03-2020) உணவு போட்டி நடக்க இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த உணவு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு LED TV, Speakers, வீட்டு மின்னணு பொருள்கள் (Electronic goods) உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படும் என அறிக்கையில் அறிவித்துள்ளது.

மேலும், அல் பிடா பூங்காவில் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு வகையான சலுகைகள் மற்றும் விளம்பரங்கள் மற்றும் முக ஓவியம் மற்றும் வீடியோ கேம்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினருக்கான பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

இதுமட்டுமல்லாமல், வருகின்ற சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” போன்ற பல சலுகைகள் இதில் இடம்பெறும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Source : Gulf Times.