கத்தாரில் நாளை பரவலான மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வுத்துறை.!

Chance of scattered rain and occasional hail on Tuesday
Pic: The Peninsula Qatar

கத்தாரில் நாளை (13-10-2020) செவ்வாய்க்கிழமை சில நேரங்களில் இடியுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) தெரிவித்துள்ளது.

மேலும், தூசி மற்றும் அவ்வப்போது ஆலங்கட்டி மழையும் வலுவான காற்றுடன் எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

கத்தாரில் இன்று (12-10-2020) பகல் நேரங்களில் வெப்பமான வானிலை மற்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் QMD கணித்துள்ளது.

காற்று, வடமேற்கிலிருந்து வடகிழக்கை நோக்கி 5 முதல் 15 கிலோமீட்டர் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் QMD குறிப்பிட்டுள்ளது.

தோஹாவில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 27 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…