கத்தாரில் 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் மால்களில் நுழைய அனுமதி இல்லை.!

Pic: iloveqatar.net

கத்தாரில் ஷாப்பிங் மால்கள், சந்தைகள் மற்றும் வணிக மையங்களினுல் 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் நுழைவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஷாப்பிங் மால்கள், சந்தைகள் மற்றும் வணிக மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் மால்கள் மற்றும் வணிக மையங்களில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் Gold Souq, Souq Al Ali, Al Gharafa Market, வியாழன் மற்றும் வெள்ளி சந்தை, Souq Waqif Doha, Souq Al Wakrah, Al Saliliya Central market உள்ளிட்ட தெரு சந்தைகளில் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மால்கள், வணிக மையங்கள் மற்றும் தெருச் சந்தைகள் போன்றவற்றில் பொது சுகாதார அமைச்சகம் மற்றும் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் கூறியுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.