கத்தாரில், மூடப்பட்டிருந்த தொழில்துறை பகுதிகள் புதிய நடைமுறைகளுடன் இன்று திறப்பு.!

Image Credits : Gulf Times

கத்தாரில், கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட தொழில்துறை பகுதியானது இன்று (06.05.2020) முதல், மறுசீரமைக்கப்பட்ட உள்நுழைதல் மற்றும் வெளியேறும் நடைமுறைகளுடன், முழுமையாக திறக்கப்படுவதாக அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) அறிவித்துள்ளது.

செனயா வீதி 1, 2 மற்றும் அல் வகாலத் வீதிகள் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்த வேளையில், இன்று வீதி 3 இல் இருந்து 32 வரையிலான வீதிகள் சில ஒழுங்குபடுத்தப்பட்ட விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 பரவலைத் தடுப்பதற்கும், அங்குள்ள மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு, 35 நாட்கள் மூடப்பட்டிருந்த செனயா பகுதியானது ஏப்ரல் 22ஆம் தேதியன்று 3 வீதிகள் திறக்கப்பட்டது.

பொது சுகாதார அமைச்சகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி மீதமுள்ள 3 முதல் 32 வரையிலான தொழில்துறை பகுதியை மீண்டும் திறப்பது செயல்படுத்தப்பட்டுள்ளதாக GCO தெரிவித்துள்ளது.

வெளியேறுதல் மற்றும் நுழைவு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தல் மூலம் உள்ளேயும், வெளியேயும் பணிகள் மற்றும் விநியோக சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதுடன், இதன் மூலம் தொற்று நோய் ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் மூலம் இங்கு நுழைவதற்கும் மற்றும் வெளியேறுவதற்கும், முதலாளிகள், செனயாவில் பணிபுரியும் ஆனால் வெளியே வசிக்கும் ஊழியர்கள், செனயாவில் வசிப்பவர்கள் ஆனால் வெளியே வேலை செய்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதோடு, இப்பகுதியில், செயல்படும் நிறுவனங்கள்
தொழில்துறை அமைச்சகத்திற்கு ஒரு விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிப்பதன் மூலம் பொருள்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து தொழிலாளர்களும் செனயா பகுதிக்குள், வருவதற்கும் மற்றும் வெளியேறுவதற்கும் Ehteraz‌ என்ற மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்வது அவசியமாகும்‌ என்று தெரிவித்துள்ளது.

பொது சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி, போதிய சமூக இடைவெளி பேணுதல், பேருந்துகளில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையை பாதி அளவிற்கு குறைத்தல், Sanitisers மற்றும் முகக்கவசங்கள் போன்றவைகளை அனைத்து தொழிலாளர்களும் முறையாக செயல்படுத்துகிறார்களா என்பதனைக் உறுதிப்படுத்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : The Peninsula Qatar