கத்தாரில், வணிக பதிவுகள் மற்றும் உரிமங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.!

Image Source : The Peninsula Qatar.

கத்தாரில், 2020 மார்ச் முதல் ஜூன் வரையிலான காலாவதி தேதியைக் கொண்ட வணிக பதிவுகள் மற்றும் உரிமங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு தானாகவே புதுப்பிக்கப்படும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MOCI) தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான மாநிலத்தின் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், புதுப்பித்தல் கட்டணங்கள் பின்னர் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

Source : TPQ