கத்தாரில் இன்று (பிப்.01) மேலும் ஒருவர் பலி; புதிதாக 385 பேர் பாதிப்பு.!

Corona update Qatar Feb22

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 385 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 147 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (01-02-2021) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 151,720ஆக உள்ளது.

கத்தார் அமீர் சூடான் நாட்டின் TSC-யின் முதல் துணைத் தலைவருடன் சந்திப்பு.!

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் ஒருவரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் பதிவு செய்துள்ளது. தற்போது வரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 249ஆக உயர்ந்துள்ளது.

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 147 நோயாளிகள்  குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,953ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 11,347 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,393,630 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

காசா பகுதிக்கு 360 மில்லியன் டாலர் நிதி மானியம் வழங்க கத்தார் அமீர் உத்தரவு.!