கொரோனா‌ வைரஸ்; இலவச அழைப்பு வசதி MoPH அமைப்பு..!

கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து விதமான கேள்வி மற்றும் விசாரணைகளுக்கு பதிலளிக்க ஒரு பிரத்தியேக இலவச அழைப்பு வசதியை பொது சுகாதார அமைச்சகம் அமைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு 16000‌ என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு, சுகாதார வல்லுநர்களும், பொதுமக்களும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதியானது அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் செயல்படும் என்பதாகவும், இந்த அழைப்பு 24×7 செயல்படும் ‌என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.