அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் முழுமையாக குணமடைந்தார்..!

Coronavirus in UAE : chinese woman recovers fully.

வூஹான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த 73 வயது பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார மற்றும் நோய்தடுப்பு அமைச்சகம் நேற்று
ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட லியு யுஜியா என்ற அவர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் இனி சாதாரணமாக வாழ்க்கையை தொடரமுடியும்‌ என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பெண்ணிற்கு சீனாவின் தூதரகம் ஜெனரல் லி ஜுஹாங் (Li Xuhang) மற்றும் சுகாதார மையங்கள் மற்றும் கிளினிக்குகளுக்கான அமைச்சின் உதவி கீழ்-செயலாளர் டாக்டர் ஹுசைன் அல் ராண்ட் (Dr.Hussein Al Rand) ஆகியோருடன் எமிரேட்ஸ் செய்தி நிறுவனம், WAM, வருகை தந்து இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்ததற்காக அந்த வயதான பெண்மணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பின் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்த செய்தி உறுதிப்படுத்தியுள்ளது.